google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதல்-நொறுக்குத்தீனி

Wednesday, May 09, 2012

காதல்-நொறுக்குத்தீனி


நொறுக்குத்தீனி
விற்றுக்கொண்டிருந்தார்கள்
வாங்கி வந்தேன்....
இனிப்போ? கசப்போ?
நீங்களும் கொஞ்சம்
நொறுக்கிப்பாருங்களேன்....

(LOVE=காதல், பாசம், அன்பு, நேசம், நட்பு)
அகராதியில் இப்படித்தான்
இருக்கிறது....
அவரவர்கள் விருப்பப்படி...

1 LOVE-
உணவை விஷமாக்கும் 
ஒரு ரசவாதி..... கால்ட்டன்
2 LOVE-
ஒரு வாழ்க்கை மலர்
அது மலர்ந்தது எங்கே?
அது பறிக்கப்பட்டது எங்கே?
பரிசோதனை செய்யாமல்
வாடுவதர்க்குள் ரசிக்கவேண்டும்.. D.H. லாரன்ஸ்
3 LOVE-
உலகை சுற்ற வைப்பது... W.S. கில்பர்ட்
4 LOVE-
வீட்டைகோவிலாக மாற்றி
தெய்வீக தீபமாக எரிகிறது
சிலநேரங்களில் புனிதமற்ற
பலிபீடங்களை எரிக்கிறது... ஹோரஸ் மான்  
5 LOVE-
ரகசியம் உடையும்போது
சந்தோசத்தில் முடிகிறது...அப்ற பெஹன்
 6 LOVE-
திராட்சை ரசம் நிறைந்த
கோப்பையிலிருந்து
ருசித்து பார்க்க எடுக்கும்
சொட்டு... ஹென்றி வார்ட் பீச்சர்
 7 LOVE-
அது சமூகத்தில்
இரண்டு கற்பனை பரிமாற்றம்
இரண்டு உடல்கள் தொடர்பானது... செபாஸ்டியட் கம்போர்ட்  
8 LOVE-
முதல் காதல்
மகத்துவமானது
அது முடிவு இல்லாதது
என்பது அறியாமை....பெஞ்சமின் டிஸ்ராயிலி
9 LOVE-
உண்மையான காதல்
நிச்சயமாக
மென்மையாக ஓடாது...வில்லியம் ஷேக்ஸ்பியர்
10 LOVE-
காதலின் மொழி
கண்களில் உள்ளது...பிநீஸ் பிளெட்சர்
 11 LOVE-
குறிப்பிட்ட காலத்தையும்
விஞ்சி வாழ்ந்திடும்
சோகமாக இருந்தால்....ஜார்ஜ் எலியட்
12 LOVE-
மிக பெரிய இன்பத்தையும்
மிக பெரிய வலியையும்
தரக்கூடியது-அதுக்கு 
ஒரு தேவதையின் முகமும் உண்டு,
ஒரு சிங்கத்தின் நகமும் உண்டு.......இவான் பானின்
13 LOVE-
உண்மையானது எனில் ,
ஒரு நீடித்த தீ விபத்து
எப்போதும் எரியும் மனதில்…. சர் வால்டர் ராலே
14 LOVE-
புதிர்களை
ஆன்மா வளர்க்கிறது
அதன் புத்தகமாக
உடல் இருக்கிறது....ஜான் டான்னே
15 LOVE-
இது இல்லாத வாழ்க்கை
மூடிய ஜன்னல்கள் உள்ள
ஒரு வண்டியில் செல்லும்
உலகப்பயணம் ஆகும்.....இவான் பணின்

இன்னும் இருந்தது
நொறுக்குத்தீனி நிறைய...
இதுவே போதுமென்று
தோன்றியது மனதில்  
***********************
காணொளி-காதலிக்க....


                    Thanks-YouTube-Published  by RajVideoVisionTamil
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1