google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கலக்காதீர்கள் புளியங்கொட்டையை!

Wednesday, May 23, 2012

கலக்காதீர்கள் புளியங்கொட்டையை!




காபி அருந்துவதில்
ஆரோக்கியமும் இருக்கு
அதிகமாக அருந்தினால்  
ஆபத்தும் இருக்கு

காபியில் தயாரிப்பின்
கேடு செய்யும் கூறுகள்
ஆரோக்கியத்துக்கு
கேடு செய்ய தருமே 
ஹைட்ரோ கார்பன்களை

இரத்தத்தில் (LDL)அளவு உயர்ந்து
இதய நோய்க்கு இழுத்துச்செல்லும்
காபியின் பாலபினால்(polyphenols)
குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும்
கேடு தரும் இரத்த சோகை தரும்

காபியின் காபின் (CAFFEINE)தருமே
 உடலுக்கு ஊக்கத்தையும்
மனதுக்கு ஆக்கத்தையும்
மூளைக்கு சிந்தனையும்
அதனால் வருமே நெஞ்சு எரிச்சலும்  
தலைவலியும் தூக்கமின்மையும்

ஆனாலும் காபியில் உள்ள
ஆண்டியாக்ஸிடண்ட்கள்
கோலோரோகேனிக் அமிலம்
லக்டோன்ஸ் கூறுகள்
செல் இறப்பை தடுக்கிறது  

காபியின் காபின் குறைந்த
காபிக்கு என்னசெய்வது?
சிக்கரி அதிகம் கலந்த    
காபி அருந்துவதே சிறந்தது!  

அல்சைமர் நோய்,
பார்க்கின்சன் நோய்,
இதய நோய்,நீரிழிவு வகை 2,
கல்லீரல் நோய்,
இவைகள் முதுமையில்
வருவதை குறைக்கிறது
சிக்கரி வயிற்றில் உள்ள
ஒட்டுண்ணிகளை அழிக்கிறது

சிக்கரி கலந்ததே சிறந்தது! 
கலப்படக்காரர்களே!
கலக்காதீர்கள் 
புளியங்கொட்டையை!


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1