google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கருப்பு அழகி

Friday, May 04, 2012

கருப்பு அழகி



அன்று
கடற்கரையில்
நடந்து கொண்டிருந்தேன்...

யாரோ ஒருவர்
காகங்களுக்கு
உணவு அள்ளி
வீசிக்கொண்டிருந்தார்
ஆனாலும்
அவைகள் எதையும்
உண்ணவில்லை

எல்லாக் காகங்களும்
கடல் மணலில்
வரிசையாக
அமர்ந்திருந்தன

அட..காகங்களே!
"வீசியதால் கோபமோ?"
என்று வினாவினேன்
அதற்கு அவைகளோ...

"வாரும் கவிஞரே!
எங்களுக்குள் 
யார் அழகி என்று 
அழகிப்போட்டி...
வாரும் நீவீர் நடுவராக"
என்று அழைத்தன.

(நம் மகாகவியே
காக்கை நம் ஜாதி
என்று சொல்லிவிட்டாரே!)

நானும் போய்
நடுவராக அமர்ந்தேன்

ஒவ்வொரு காகமாக   
அழகு காட்டி
அணிவகுத்து வந்தன

அடித்தது யோகம
ஒர் அண்டங்காக்கைக்கு
கருப்பு அழகி என்று
கிளியோபட்ரா பட்டமும்
கிழிந்துபோன பண்ணும்
பரிசாக அளித்தார்கள்

ஐஸ்வர்யா ராயை
உலக அழகியாக
தேர்ந்தெடுத்த
நெல்சன் மண்டேலா போல்
நானும் வாழ்த்திவிட்டு
வந்துவிட்டேன்... 

*****************************************
காணொளி-காக்கை சிறகினிலே.....


                                                             thanks-YouTube

  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1