google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதல் அவளது தூரிகை

Friday, May 04, 2012

காதல் அவளது தூரிகை




(பெண்கள் எனக்கு எதிரிகளல்ல
காதலும் எனக்கு எதிரியுமல்ல.
நீயின்றி நான் இல்லை என்று
உயிரை இழக்காதிர்கள்
‘காதல் நோய்யை பரப்பாதீர்கள்
என்ற எண்ணத்தில்தான் 
காதல் அவளது வேடிக்கை 
எழுதப்பட்டது........)      

மலர் ஒன்றைப் பார்த்தேன்
மலரும் என்னைப் பார்த்தது
மகிழ்ந்து போனேன்
(அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்)  

நான் நேசித்த மலரை
மொய்க்க வந்தன
வண்டுக்கள் கூட்டம்

ஆனால்

அந்த மலரோ  
புன்னகையிழந்து
தன இதழ்களை
மூடிக்கொண்டது

வண்டுகளை
மன்றாடிக் கேட்டேன்
போகவில்லை
மிரட்டல் விடுத்தேன்
போய்விட்டன

மீண்டும்

நான் நேசித்த மலரை
மொய்க்க வந்தன
வண்டுக்கள் கூட்டம்

....................................
...................................
அந்த மலரிடம் கேட்டேன்
ஏன் உன் இதழ்களை
மூடிக்கொண்டாய் என்று
(யாமிருக்க பயமேன்)

அதற்கோ அந்த மலர்.....   

“என் இதயத்தில் உன்னை
வரைந்து வைத்தேன்
எங்கே இவர்கள்
அந்த ஓவியத்தை
அழித்து விடுவார்களோ?  
என்றுதான் என் இதழ்களை
மூடிக்கொண்டேன் என்றது

காதல் அவளது தூரிகை-என்  
கவிதை அவளுக்கு காணிக்கை  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1