google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அப்பாவும் நீயே! ஆசானும் நீயே!

Monday, May 28, 2012

அப்பாவும் நீயே! ஆசானும் நீயே!


 

அரைக்கால் சட்டையுடன்
ஆடித்திரிந்த வயதில்
பிறந்த ஊரில் இருந்தால்
படிக்க மாட்டாய் என்று 
அழைதுச்சென்றாய் வடுகபட்டிக்கு

அன்றிலிருந்து உன் நினைவு
இன்றுவரை இருக்கு இதயத்தில்
இறந்துதான் நீ போனாலும்.....

அதிகாலையில் எழுந்து
நீராட அழைத்து செல்வாய்
வடுகை வராகநதிக்கு..
மலையில் மழை பெய்தால்
வரும் நீர் கலங்கலாக
இல்லையேல் கிடக்கும்
மணலே நீராக....
ஆனாலும் அங்கே இருக்கும்
அமர்ந்து குளிக்கும் ஊற்று
(அன்று அதிலேயும் ஊற்று இரண்டு)

காலைக்கடன் கழிப்பதோ
காலமானவர்கள் கூட்டமாய்
புதைந்து கிடக்கும் சுடுகாடு
அப்போது சொல்வாய்
அவர்கள் சிலரின் கதையை...
(அன்று அங்கேயும் பகுப்பு இரண்டு)

நீயோ எல்லோருக்கும் பொது வியாபாரி
இல்லை உன்னிடம் உயர்வு தாழ்வு
எல்லோருக்கும் வணங்கும்
உன் கரங்கள் குவித்து
அதனாலே வளர்ந்தாய்
வாழ்வில் வளம் குவித்து.   

எப்படி படிக்க வைக்க வேண்டும்?
எதுவும் தெரியாது உனக்கு
எப்படி படிக்க வேண்டும்?
எதுவும் தெரியாது எனக்கு
சதுரங்கத்தில் சிறந்த நீ
சறுக்கிவிழுந்தாய் இதில்.    
 
ஆனாலும் உன் அறிவுரைகள்
அப்படியே இருக்கு என் நெஞ்சுக்குள்
அவைகள்தான் உணவு என் உயர்வுக்கு

அப்பாவும் நீயே! ஆசானும் நீயே!
**********************************
காணொளி-உள்ளத்தில் நல்ல உள்ளம்...

 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1