google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: போய் எழுது காதல்கவிதை!

Monday, May 14, 2012

போய் எழுது காதல்கவிதை!


கிராமங்களெல்லாம்
நகரங்களாகியது  
நகரங்களெல்லாம்
மாநகரங்களாகியது

குடிசைகளெல்லாம்
கல் வீடுகளானது
கல்வீடுகளெல்லாம்
வின்னைத்தொடும்
மாடிவீடுகளானது

வயல்வெளிகளில்
சிரிக்கும் நெல்மணிகள்
மரங்களெல்லாம்
மகிழ்ந்தன உயிரோடு  

அணைகள் நிரம்பிவிட்டன
கர்நாடகாவும் கேரளாவும்
தமிழ் நண்பர்களாகினர்

போதைக்கடைகள் பக்கம்
போவதில்லை குடிமக்கள்
விலையில்லா பொருள்களை
வாங்குவதற்கு யாருமில்லை

கடவுள்களும் மடாதிபதிகளும்
பதுக்கியவைகளை பகிர்ந்தார்கள்
வங்கிகளில் ஒதுக்கியவர்கள்
வாரியிரைத்தார்கள் வள்ளலாக

குப்பையைக் கிளறும் சிறார்கள்
புத்தகத்தை புரட்டுகிரார்கள்
தத்துவ மேதைகள்
பித்தராகப் பிதற்றுகிறார்கள்   


மந்திரிகள் மாறிவிட்டார்கள்
தந்திரங்கள் செய்வதில்லை  
புரட்சியாளர்கலெல்லாம்
தூங்கப்போய்விட்டார்கள்
கோவணம் கட்டியவர்கள்
கோட்டும்சூட்டுமாக வருகிறார்கள்
இல்லை எங்கும் வயிற்றுப்பசி
நிறைய தின்றதால் வயிற்றுவலி

இந்தியா போய்விட்டது எங்கோ!
வல்லரசாக மாறிவிட்டது இன்றே!

ஏ...சமுதாய கவிஞனே!
நீமட்டும் ஏன் இங்கு
பொய்யாய் புலம்புகிறாய்
போய் எழுது காதல்கவிதை!     
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1