google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இங்கே யார்தான் கடவுள்?

Wednesday, May 30, 2012

இங்கே யார்தான் கடவுள்?


நான் கடவுள்! நீ கடவுள்!
இவர் கடவுள்! அவர் கடவுள்!
இங்கே யார்தான் கடவுள்?

அடிமைபடுத்தி நம்மை
ஆண்டவர்கள் இங்கே
ஆண்டவர்களாய் அவதரித்தார்கள்
ஆண்டவர்களை அறிவித்தார்கள்
அப்போதுதான் இவர்கள்
அடங்கிப்போவார்கள் என்று

இன்னல்கள் பல கண்டு
இன்னுயிர்தனை விடுத்து
எல்லோரும் மன்னர்களாய்
ஏற்றமிகு செய்த இறைவன்கள்
விடுதலைப்போராட்ட
வீரர்களும் தலைவர்களும்
இவர்களின்றி இந்தியாவில்
இருக்கிறார்களோ கடவுள்கள்?

இல்லம்தோரும்
இருக்கவேண்டாமா
இவர்கள் கடவுள்களாக?
 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1