google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அமேசான் காட்டிலிருந்து...

Sunday, May 13, 2012

அமேசான் காட்டிலிருந்து...


அமேசான் காட்டில் வாழும்
பச்சோந்திகளுக்கு வந்ததே
பாம்புகளால் தொல்லை
பரிதாபகரமான நிலை...

அவசரமாக கூட்டின
ஆலோசனைக்கூட்டம்
அடுத்து என்ன செய்வது?
அமேசான் பாம்புகளிடமிருந்து
எப்படி தப்பி பிழைப்பது?  

அதிலொரு பச்சோந்தி
உலகம் சுற்றும் வாலிபனோ    
உரைத்தது செய்தி ஓன்று...

இந்தியாவுக்கு போய்விடுவோம்
இருக்கிறார்கள் அங்கே நிறையபேர்

இருக்கும் இடத்துக்கு தக்க
இயல்பை மாற்றும் மனிதர்கள்
 
பணத்துக்காக பலவிதமாய்
உருவம் மாறும் உதவாக்கரைகள்
நிறம்மாறும் நயவஞ்சகர்கள்   

ஆடை மாற்றுவதுபோல்
அவ்வப்போது கட்சிமாறும்
அரசியல்வாதிகள்

மக்களை மயக்கும் மதவாதிகள்
மந்திரம் தந்திரம் செய்யும்
மந்திரவாதிகள் மடாதிபதிகள்  

இன்னும் இருக்கிறார்கள்
இந்தியாவில் நிறையபேர்
அங்கேபோய் நாமும் 
அவர்களாக மாறிவிடலாம்    
***************************
காணொளி-காலத்தை மாற்றினான்.... 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1