google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஓராண்டு சாதனை

Wednesday, May 16, 2012

ஓராண்டு சாதனை


எங்கவீட்டு பூனை ஓன்று
போட்டது குட்டிகள் நூறு
இதில் என்ன சாதனை?

இந்த ஓராண்டிலேயே
அந்த ஒரு பூனையே
போட்டது குட்டிகள் நூறு
அதுதான் சாதனை!

கின்னசில் இடம்
லிம்காவில் பதிவு  
விடுவார்களா நண்பர்கள்
தெருவெங்கும் தோரணங்கள்  
வாழ்த்துக் கோசங்கள்
இனிப்பு வழங்குதல்

எல்லாம் முடிந்து
எல்லோரும் போனார்கள்  
இந்த பூனைக்குட்டிகளை
என்ன செய்வது நான்?

விலையில்லாமல்
கொடுத்தாலும்
வாங்கத்தான்
நாதியில்லை  
ஓராண்டு சாதனையே 
இப்படியென்றால் 
இன்னும் நாலாண்டில் 
எண்ணலாம் நடக்குமோ?

அதுக்கு சாதனை!
எனக்கோ வேதனை! 
      
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1