google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரேசனில் கிடைக்குமா தண்ணீர்?

Sunday, May 20, 2012

ரேசனில் கிடைக்குமா தண்ணீர்?


தண்ணீர்-
இந்த பூதம்
நம் உடலில் வேண்டும்
மூன்றில் இரண்டு பங்கு
இருந்தால் ஆரோகியமுண்டு
இல்லையேல்? இல்லைதான்!   

அளவு குறைந்தால்
தந்துவிடும் தலைவலி
வந்துவிடும் உடல்வலி
அளவு சரியென்றால்
மாத்திரைகளை தூக்கியெறி!

உயிரணுக்களினுள்
ஆக்ஸிஜன் பயணப்படுத்தும்
நுரையீரலில் காற்றை ஈரப்படுத்தும்
வளர்சிதை மாற்றம் தரும்
ஊட்டச்சத்துகளை உறிஞ்சி
உறுப்புகளை பாதுகாக்கும்
உடல் வெப்பநிலையை
முறைப்படுத்தி நச்சுநீக்கும்

இன்னும் பல இருக்கு
நாம் குடிக்கும் தண்ணீரிலே...  
கிடைக்கத்தான் மாட்டேன்கிறது
நல்ல குடிநீர் நம்நாட்டினிலே  
பணமிருந்தால் பாட்டில்களிலே
கார்பரேசனில் வருவதோ
மஞ்சள் கலரிலே
கிணற்றில் கிடப்பதோ
உப்பு சுவையிலே
   
எதையெல்லாமோ ரேசனிலே
கொடுக்கும் அரசுகளே!
தண்ணீர் பாட்டில்கள் தரலாமே


(குறிப்பு:இது டாஸ்மாக்கில் கிடைக்கும்
‘தண்ணீர் பாட்டில் பற்றியல்ல)    

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1