google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நல்லதோர் நாடு செய்வோம்-2

Sunday, June 17, 2012

நல்லதோர் நாடு செய்வோம்-2



வீட்டுக்கொருவர் வாருங்கள்
நாட்டுக்கு நல்லது செய்ய….

நம்ம வீடு நம்ம நாடு
வீட்டு சுத்தம் வீதி சுத்தம் 
ஒரு நாட்டை அழிக்க 
இன்னொரு நாடு வேண்டாம் 
அந்த  நாட்டு அசுத்தமே 
அதை  அழித்து விடும்

மக்கும் குப்பைகளை
மரத்தடியில் புதைத்திடுவீர் 
மக்காத குப்பைகளை
வீதியெங்கும் விதைக்காதீர்
அதற்க்குரிய தொட்டியில்
அதைத்தான் அடைப்பீர்   

இல்லத்தில் இருக்கும்
சாக்கடை அடைப்பை
சங்கடப்படாமல் நீரே
சரிசெய்தே வைப்பீர்
கூலிக்கு மாரடிக்கும்
கூட்டத்தை நம்பாதீர்

சுத்தம் சுகம் தரும்
அசுத்தம் அகம் கெடும்
எல்லாம் சரியாய் செய்திடவே  
எந்த கொசுவும் எதுவும் செய்யாது

அழுக்கு தெருக்களை
அலசிப்போட வாருங்கள்
அதுவும் முடியாதெனில்
அழுக்கு ஆக்காதீர்கள்

நல்ல எண்ணமுடன் வாரும்
நல்லதோர் நாடு செய்வோம்
.............................(தொடரும்) 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1