google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: எங்கே போனார்கள்?

Friday, June 01, 2012

எங்கே போனார்கள்?




உண்மைக்காதலை
வாழ்த்தியபோது
வாழ்த்து சொன்னார்கள் 
காதல் நவரசத்தை
கவிதையில் சொன்னபோது
ஆஹா....ஓஹோ.....
என்று சொன்னவர்கள்.....
காதல் நோயால்
வாழ்வைதொலைக்கும்
வதந்தியை பரப்பாதிர்கள்
என்று சொன்னபோது
அறிவுரை சொல்வதாய்
அலட்டிக்கொண்டார்கள்  

ஆன்மீகவாதிகளின்
கபடவேடங்களை
தோளுரித்தபோது
கைதட்டியவர்கள்
கருத்துச்சொன்னவர்கள்
ஆன்மீகமே கபடம்தான்
என்று சொன்னபோது
எங்கே போனார்கள்?
ஆன்மீகத்தை தீண்டியதால்
நாத்திகனல்ல நான்
சொந்த அறிவைத்தவிர
பகுத்தறிவு பகுக்காத அறிவு
எந்த அறிவும் தேவையில்லை
எவர் பின்னாலும் போவதில்லை

சமுதாயத்தின் சங்கடங்களை
சாடியபோதும் பாடியபோதும்
அரசியல்வாதிகளின் அசிங்கங்களை
அம்பலப்படுத்தியபோதும்
கருத்திட்டு மகிழ்ந்தவர்கள்
அப்புறம்தான் யோசித்தார்களோ
இவன் உயர்ந்தவனா? தாழ்ந்தவனா?
இவன் நமக்கு உகந்தவனா? என்று 
ஆளும் கட்சியா? ஆண்ட கட்சியா?
ஆளப்போகிற கட்சியா? என்று. 

என்றும் என் காதல்-இந்தியா
என்றும் என் ஆன்மிகம்-இந்தியா
என்றும் என் சமுதாயம்-இந்தியா
என்றும் என் கட்சி-இந்தியா  
 
இந்தியன் என்று சொல்வேனே!
இறுமாப்பு கொள்வேனே 
இன்றும்  அன்றும் என்றும்! 
(இதுக்கும் கருத்திடுவார் 
இவன்மட்டும்தான்
இந்தியனா? என்று)  

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1