google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இருவேறு பாதைகள்

Saturday, June 02, 2012

இருவேறு பாதைகள்


இதுவரை வாழ்ந்த
என் பயணத்தில்
இருவேறு பாதைகள்
உடலுக்கு ஓன்று
உள்ளத்துக்கு ஓன்று

உடல் பயணம் தளர்ந்தாது  
இன்றோ நாளையோ
இருக்கிறது கொஞ்சதூரம்
அதுவும்தான் போவேனோ
ஆகுமோ அரைப்பயணம்?

உடலுக்கு வயது
ஆனது ஐம்பத்திமூன்று
உள்ளத்துக்கு வயது
அனுபவமோ ஆயிரமாண்டு

உள்ளத்தின் பயணமோ
ஒய்வில்லாதாது தொய்வில்லாதது  
தூக்கமில்லாதது தொலைவில்லாதது  

சமுதாயத்துக்கு
சங்கடமென்றால்  
சங்கு ஊதுகிறது
பாவையருக்கு
பாதகமென்றால்
பொங்கியெழுகிறது
ஆண்மீகவாதிகளின்
கபடவேடங்களை
கலைக்க நினைக்கிறது

உடல்பயணம் முடிந்தாலும்
உள்ளப்பயணம் தொடரும்
என் எழுத்துக்கள் என்றும்
எழுந்து கொண்டேயிருக்கும்

   

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1