google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நகரத்தில் ஒரு விருந்து

Monday, June 11, 2012

நகரத்தில் ஒரு விருந்து



அந்த நகரத்தின் மத்தியில்
அது ஒரு மிகப்பெரிய
நட்சத்திர தங்கும் விடுதி

வந்தார்கள் விருந்தினர்கள்
விலையுயர்ந்த வாகனங்களில்
நாகரிக உடையில் நளினமாக

அவரவர்கைகளில்
விலைமதிப்பான
பரிசுப்பொருட்கள்

அயிந்து மாடியேறி
அலங்கார அறைக்குள்
நுழைந்தார்கள்
ஆரவார வரவேற்ப்பு
மது பான உபசரிப்பு
ஆண்களும் பெண்களும்
அருந்தினார்கள் உண்டார்கள்
அவரவர் எடுத்து உண்ணும
அறுசுவை விருந்து  

நகரத்தின் மிகப்பெரிய
செல்வந்தர் இல்ல விழா
நடு நாயகமாக இருந்தது
அன்று பிறந்தநாள் காணும்
அவர் வீட்டு நாய்குட்டி.....

அடுத்த நாள் பேசினார்
அந்த செல்வந்தர் ஆடிட்டரிடம்
பிறந்தநாள் விருந்துச்செலவு
ஒரு கோடி தாண்டியது
வருமான வரியில்
சரிகட்ட முடியுமா? என்று.    
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1