அழகு தமிழ் நாட்டினிலே
அமுத மழை பெய்கிறது
டாஸ்மாக் கடைகளிலே
வெளிநாட்டு சரக்கெல்லாம்
விலைகுறைவாய் கிடைக்கிறது
வீதியெங்கும் குடிமக்கள்
வாழ்த்தொலி கேட்கிறது
இனிய தமிழ் நாட்டினிலே
இன்பம் மழை பெய்கிறது
இரவு பகல் பாராமல்
இனிக்கும் விருந்துகள்
இறைவன் பெயரால்
இனிதே நடக்கிறது
பைந் தமிழ் நாட்டினிலே
பண மழை பெய்கிறது
இடைத்தேர்தல் இங்கே
கடைத்தெருவுக்கு வந்தது
வாங்கவும் விற்கவும்
வாக்குகள் கிடைக்கிறது
எங்கள் தமிழ் நாட்டில்
எல்லாவளமும் இருக்கு!
ஓ....வான் மழையே!
வரவேண்டாம் நீ இங்கே.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |