google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஒளி மலையே! மீண்டும் வாராயோ?

Thursday, June 14, 2012

ஒளி மலையே! மீண்டும் வாராயோ?




ஆங்கிலேயர் அள்ளிச்சென்ற
இந்திய பொக்கிசமே!
அரிய கோகினூர் வைரமே!

இன்றைய இந்தியாவின்
ஆந்திரா குண்டூர் மாவட்டம்
கொல்லூர் பகுதியில் பிறந்து....
பல பாதுசாக்களிடம் பதுங்கி
ஆங்கிலேயரிடம் அடைக்கலமான
அதிசய கோகினூர் வைரமே!

ஒளி மலையே! உன்னுள்
ஓழிந்துள்ளதாம் சாபகேடு...  
அதை அணிந்த அரசர்கள்
இழந்தனராம் மகுடத்தை
இது இருந்த சாம்ராச்சியம்
இல்லாமல் போனதாம்
அதனால்தான் அங்கே
ஆங்கிலேய அரசாங்கத்தில்
அரசர்கள் அணியவில்லையாம்  
மகாராணிகள் மட்டுமே
மகிழ்ந்து அணிகின்றனராம்   
பெண் என்றால் பேயும் இறங்கும்
வைரம்கூட விதிவிலக்கல்ல போலும்?  
   
எந்த சாபமும் எதுவும் செய்யாது
அபகரிப்போரைத்தான் அழித்தது
அந்த வைரத்தின் சாபக்கேடு
அந்த உண்மை தெரியுமா உமக்கு?  
அழித்துவிடும் உம்மை ஒருநாள்
அழித்ததும் வந்துவிடும் எம்மிடம்.    

இந்தியாவின் இயற்கைச் செல்வமே!
இந்தியாவுக்கு மீண்டும் வருவாயோ?
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1