google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அழகே! உன் அடிமை நான்

Thursday, June 14, 2012

அழகே! உன் அடிமை நான்



நட்சத்திர மழை பொழியும்
நள்ளிரவு நேரத்தில் 
நாணத்துடன் நோக்கும்    
வானத்து வெண்ணிலவாய்  
எளிமையும் அமைதியும்
பிரகாசிக்கும் பெண்ணே!
வசீகர அழகு தேவதை நீ!

வரைகலை சூத்திரதாரி 
லியோனார்டோ டாவின்சி
வரைந்தால் பெண்ணே!நீ   
மோனா லிசா ஓவியம! 


அவள் முகத்தைப்பாருங்கள்
அவள் கண்கள் எழுதுமே
ஆயிரமாயிரம் கவிதைகள்
அவள் புன்னகை தருமே
ஆயிரமாயிரம் கனவுகள்  
அத்தனையும் மயக்கும் புதிர்கள்
பெண்ணே நீ! மாய மோகினி!

அழகே! உன் அடிமை நான் 

(இப்புகைப்படம் பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் 1995-ல் மிகுந்த சிரமத்துக்கிடையில் எடுக்கப்பட்ட மோனோ லிசா அசல் ஓவியம்)   
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1