google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஒரு புழுதிக்காற்றின் புலம்பல்

Monday, June 18, 2012

ஒரு புழுதிக்காற்றின் புலம்பல்


நல்ல காற்றாகத்தான்
நானும் வந்தேன்
தென்றல் காற்றாகத்தான்
தவழ்ந்திருந்தேன்
இருந்த மரங்களை
இங்கே காணோம்
எல்லாம் போனது
எங்கே தெரியவில்லை

மரங்கள் இருந்தால்
மகிழ்ந்துபோவேன்
மன அழுக்கை
மறந்துபோவேன்
மரத்தின் இலைகளில்
என் தேகத்தின் அழுக்கை
துடைத்துக்கொள்வேன்
சுகாதாரமாய் சுற்றித்திரிவேன்

வேப்பமரத்தை தழுவினாலும்
இனிக்கும் காற்றாய்
இதமாய் வருவேன்  
இருக்கும் மரங்களும்
மொட்டை தலையாய்..
எந்தன் அழுக்கை
எங்கே தொலைப்பேன்? 

கிராமத்து கதைதான்
இப்படியானதென்று
நகரத்துக்குள் நுழைந்தேன்
நாற்றமெடுக்கும் காற்றாய்
நானும் மாறிவிட்டேன் 

என்னை சுத்திகரிக்கும்
சுகாதார நிலையங்கள்
மரங்கள் என்பதைத்தான்
மறந்துவிட்டீர்களே!
மரங்களை நட்டு வையுங்கள்
மனிதர்களே உங்களுக்கு
ஆரோக்கியத்தை அள்ளித்தருவேன்

எல்லா மரங்களும் எங்கே போனது?
என் புழுதிக் காற்றும் நிரந்தரமானதே!  
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1