google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: முட்டாளினி யோகம்

Thursday, June 21, 2012

முட்டாளினி யோகம்


 
அந்தரத்தில் உங்களை
மிதக்க வைப்பேன்
ஆகாயத்தில் உங்களை
பறக்க வைப்பேன்
ஆண்டவன் உங்களை
ஆசிர்வதிக்க வைப்பேன்  
இதன் பெயர்தான்...........
முட்டாளினி யோகம்

கண்களை மூடுங்கள்
கால்களை மடியுங்கள்
கிண்ணத்திலிருக்கும்
அமுதத்தை அருந்துங்கள்
அப்படியே நீங்கள்
துள்ளிக் குதியுங்கள்
துணைக்கு வேண்டுமெனில்
அனைத்துகொள்ளுங்கள்
அச்சச்சோ....
அழைத்துக்கொள்ளுங்கள்
அருகிலிருக்கும் பக்த்தைகளை!  

அதற்க்கு முன் அன்பு பக்தர்களே!
உங்களிடமுள்ள பெருந்தொகையை
அடியேனின் சிறு உண்டியலில்
அப்படியே போடுங்கள்...........



(யோகா ஒரு ஆரோக்கிய கலை
அய்யோக்கியர்களின் கைகளில்
அகப்பட்டுக்கொண்டு விட்டால் அது
ஆரோக்கியத்தை கெடுக்கும் களை
இதோ வேடிக்கை யோகா காணொளி) 

  

Thanks-YouTube-Uploaded by on Jul 18, 2011

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1