google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மிச்சம் எச்சமிருந்தால்

Saturday, June 02, 2012

மிச்சம் எச்சமிருந்தால்


தீர்ப்புகள்
விரைவில்
சொல்லப்படும்

கொடுப்பதை 
விரைவில்
கொடுத்தால்.....

நல்ல தீர்ப்புகள்
நியாய விலையில்
இங்கே கிடக்கும்

காந்திஜி படம்போட்ட   
கரன்சிநோட்டுகள்
காட்டிக்கொடுப்பதால்
பணமாக வாங்க மாட்டோம்
பண்டைமாற்று முறையில்
பொருட்கள் கொடுங்கள்
அதற்காக பழைய பாத்திரங்கள்
கிழிந்த சட்டைகள் வேண்டாம்

சுரங்கம் தோண்டினால்
சுரண்டியத்தில் கொஞ்சம்
மிச்சம் எச்சமிருந்தால்  
கொடுங்கள் போதும்
மணல் வாரினால்
மிச்சம் எச்சமிருந்தால்  
வாரிகொடுங்கள் கொஞ்சம்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1