google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஏதேனும் செய்வாயோ?

Monday, June 25, 2012

ஏதேனும் செய்வாயோ?



நேற்று-
வத்தலும் தொத்தலுமாக 
இரண்டு காளை மாடுகள்
நடுவிலே உழுத்து தேய்ந்த
கலப்பை ஓன்று...
உழுது விதைத்த நெல்லும்
விளையும்போது வாய்க்கால் சண்டை
வந்து சேரவேண்டிய நீரும்
வராமல்போனது வரண்டுபோனது 
விளைந்த நெல்லும் சாவியானது
மாடு வயிறு நிறைந்துபோனது
மனித வயிறு உறைந்து போனது 

இன்று-
ஆழ்கிணறு ஓன்று தோண்டி
அவ்வப்போது வரும் கரண்டில்
அதிலிருந்து நீரெடுத்து......
இயந்திர கலப்பை ஓன்று வாங்கி
உழுதிட்டு விதைத்தேன் நெல்லை
விளைந்தது நெல்லும் நன்றாகத்தான்
வந்தார்களே எல்லோரும் ஒன்றாகத்தான்
அள்ளிச்சென்றார்கள் அனைத்தையும்தான்
வாங்கிய கடனுக்கும் வட்டிக்கும்தான்
எனக்கு கிடைத்தது வைக்கோல்தான்
என்ன செய்வது அதை வைத்துத்தான்?

நாளை-
நான் என்ன செய்வதென்று  
நாடே நீதான் சொல்வாயா?
நான் வாழ ஏதேனும் செய்வாயா?   
*****************************************
காணொளி-  விவசாயி.....


Thanks-YouTube 


 






இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1