google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அடியேனையும் சேர்ப்பீரா உம்மோடு!

Sunday, June 03, 2012

அடியேனையும் சேர்ப்பீரா உம்மோடு!


 
எத்தனை இடர்கள் வந்தாலும்
அத்தனையும் தவிடுபொடியாக்கி
ஆதினமானவரே!
ஆதரிக்கின்றேனையா உம்மை!
ஆனந்தத்தின் உச்சமே!
ஆள்வீர் நீவீர் ஆயிரமாண்டு!

கதவைத் திறவுங்கள் காற்று வரட்டும்
அதையும் படிக்காதவர் இருந்தால்
காற்று வராமல் புழுங்கி அழட்டும்

எத்தனை சோதனைகள் அய்யா உமக்கு
அத்தனை பரிசோதனைகளும்
செத்தனவே பரிதாபமாக......

உம்மீது வந்த
பக்தைகளின் பரவசத்தை
உமது காமகளியாட்டமென்று
படம்பிடித்து காட்டினார்கள்
நடிகையுடன் நீவீர் கிடந்ததாய்
ஒளிபரப்பு செய்தார்கள்
ஒட்டுவேலை அது என்று
ஓங்கி அடித்தீர் அவர்தம்தலைகளில்
அமெரிக்காவிலிருந்து ஒரு பெண்
அவதூறு சொல்கிறாள் உம்மீது
அதையும் சரிசெய்தீர் பரிசோதனையில்

எத்தனை இடர்கள் வந்தாலும்
அத்தனையும் தவிடுபொடியாக்கி
ஆதினமானவரே!
அடியேனையும் சேர்ப்பீரா உம்மோடு!
****************************************
காணொளி-பன்னீர் மொழியான்......  



Thanks-YouTube-Uploaded by on Jun 21, 2010


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1