google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கடல் விற்பனைக்கு

Sunday, July 01, 2012

கடல் விற்பனைக்கு




நிலம் விற்று தீர்ந்தது
விவசாய நிலங்கள்
காடு மேடு குகைகள்
வீடு கட்டும் இடமாக
கூறு போட்டு வித்தாச்சு
இனி இருப்பது.........  
கடல் பகுதி மட்டுமே
கவலை வேண்டாம்
படகு மீது கட்டலாம்
பங்களா வீடுகள்
கப்பல் தளத்தில் கட்டலாம்
அடுக்கு மாடி குடியிருப்புகள்

சுனாமியிலிருந்து பாதுகாப்பு
அயிந்து வருடம் இலவசம்
முதலில் வரும் நூறு பேருக்கு
போக்குவரத்து படகு இலவசம்

இன்னும் ஏன் தயங்குறிங்க?
ஒரு கிரவுண்டு நூறு ரூபாய்தான்.

இன்னும் ஏன் யோசிக்கிறீங்க?
இப்படித்தான் என் தாத்தா
அய்ம்பது வருஷத்துக்கு முன்னாடி
அண்ணாநகரில் ஒரு கிரவுண்டு
அய்நூறு ரூபாய்க்கு வாங்க
அப்போது யோசிச்சாரு...

இப்படித்தான் என் அப்பா
அயிந்து வருஷத்துக்கு முன்னாடி
அடையாரில் ஒரு கிரவுண்டு
அய்யாயிரத்துக்கு வாங்க
அப்போது யோசிச்சாரு.....
இப்படியே நீங்க யோசித்தால்
இருக்குமிடத்துக்கு என்ன செய்வீங்க?

இதைவிட நல்ல இடம் இருக்குதா?
இருபத்தினாளுமணி நேரமும் 
இலவச கடற்காற்று
இருக்குமிடத்திலேயே
இலவசமாக மீன் புடிக்கலாம்
இன்னும் இருக்கு நிறையங்க

எல்லாம் விற்று தீர்ந்து போச்சு
இன்னும் கொஞ்சம்தான் இடமிருக்கு  
எல்லோரும் ஓடி வாங்க...வாங்க
கடல் விற்பனைக்கு கடல் விற்பனைக்கு
SHE FOR SALE.....sorry.....SEA FOR SALE  
******************************************************
காணொளி-ஆடி அடங்கும் வாழ்க்கையடா...
    

Thanks-YouTube-Uploaded by on Jan 10, 2011

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1