google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வெள்ளை அங்கி

Monday, June 04, 2012

வெள்ளை அங்கி



அது ஒரு கடற்கரை கிராமம்
அங்கு ஒரு கிருத்துவ ஆலயம்
அதில் ஒரு பாதிரியார்
மக்களால் நேசிக்கப்பட்டவர்
அந்த ஆலயத்துக்கு வருபவர்களில்
அழகுமங்கை ஒருத்தியும் உண்டு....

திடீரென்று அவளை காணவில்லை
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
மக்கள் வந்தார்கள் ஆலயத்துக்கு
பாதிரியாரிடம் முறையிட....

அங்கே இருந்தது வெள்ளைங்கி  
கறைபடாத வெள்ளை அங்கி
காணவில்லை பாதிரியார்
காணாமல் போனது இருவரும்தான்

இதுதான் ‘வெள்ளை அங்கி கதை
எழுதியதோ சொல் விளங்கும் பெருமாள்
நாகமலை SVN கல்லூரி பேராசிரியர்
1971-மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில்
இளநிலை பட்டதாரிகளுக்கு பாடநூல்

என்ன வித்தியாசம் இன்று?
கறை படிந்தாலும் யாரும்
கழற்றி வைப்பதில்லை அங்கியை
சோப்பு போட்டு துவைத்து
அணிந்துகொண்டு அலைகிறார்கள்   


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1