google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தொல்லைக்காட்சி

Thursday, June 28, 2012

தொல்லைக்காட்சி



வீட்டுக்குள்ளிருக்கும் மதுக்கடை
வாழ்க்கையை விரயம் செய்யும்
மின்சார மோகினி
கண்களை கெடுக்கும்
மின்னல் தாரகை
விழிகளைப் பிடுங்கி
வெளியே எறியும்
வேதாளத்தின் சொந்தம்  

அடுக்கி வைத்த புத்தகங்கள்
அலமாரியில் தூங்க செய்து  
இருக்கும் அறிவையும்
இல்லாமல் செய்யும்
கரையான் பெட்டி 
சிந்திக்கும் திறனை
சிதறடிக்கும் சாத்தான்

கோடிதருவதாய்
வேடிக்கை காட்டும்
சோம்பேறி வாழ்வுக்கு
ஜோடி சேர்க்கும்

எங்கோ நடக்கும்
அநியாயங்களை
அந்தரங்களை
வீடு தேடிவந்து
விருந்து படைக்கும்

எதற்காவது ஒன்றுக்கு
என்றும் மனிதன் அடிமை
இன்றோ மனிதன்
தொல்லை தரும் இந்த
தொலைக்காட்சிக்கு அடிமை!  
******************************
காணொளி-யாரடி நீ மோகினி....






  • Thanks-YouTube-Uploaded by on Mar 2, 2011

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1