google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மனதை சலவை செய்ய

Friday, June 29, 2012

மனதை சலவை செய்ய

 
தேவை இல்லாதவைகளை
கேட்டதாலும் பார்த்ததாலும்
பாழடைந்து போனதோ மூளை?
பழுதடைந்ததோ அதன் வேலை?

மனமே! நீயேன் மதிகெட்டுபோனாய்? 

துவைத்தேன் துவண்டுபோனேன்
கிழிந்ததே அழுக்கு போகவில்லை
சலவை செய்தால் சங்கடம் தீருமா?
இரவல் மூளைக்கு எங்கே போவது?  

யார் அந்த சலவைக்காரர்?
எங்கே இருப்பார் அவர்?
(ஆ...சாமிகளா? அவர்கள் வேண்டாம்
அவர்கள் பாடே ஆனதே திண்டாட்டம்)
சாக்ரட்டீசின் “உன்னையே அறிவாய்
உலக தத்துவமே உதவிக்கு வந்தது 

உன் மனதை சலவை செய்ய
இன்னொருவர் தேவையில்லை!

அதிகாலையில் விழித்திடு
அப்படியே காலைக்கடன் முடித்திடு
அயிந்துகிலோமீட்டர் நடந்திடு
அதன் பெயர்தான் நடைபயிற்சி

உன் சிந்தனையெல்லாம் சீராகும்
கைகளை வீசி நடந்திட்டால்
கவலைகள் யாவும் பறந்துபோகும்

தொப்பை தொல்லை தொலைந்திடும்
சர்க்கரை நோயும் தீர்ந்துவிடும்
உயர் இரத்த அழுத்தம் குறைந்திடும்
மூட்டுவலி முதுகுவலி முடிந்திடும்
ஆரோக்கிய காற்றே சுவாசிப்பதால்
அதுவாகவே இரத்த ஓட்டம் சீராகும்
ஆண்மை சக்தி அதிகரிக்கும்
தாய்மை பேறு தானே சீராகும்

இன்னும் இருக்கு நன்மைகள் நிறைய
இன்றே தொடங்கு தினமும் நடைபயிற்சி  
கதிரவன் உதயம் தொடங்கும்போது
காரிருள் சூழ்ந்த மனம் தெளிவாகுமே! 
*************************************
காணொளி-மனமொரு குரங்கு.....



Thanks-YouTube-Uploaded by on Oct 15, 2011
 
     
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1