google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: தொட்டிச்செடி

Sunday, July 01, 2012

தொட்டிச்செடி




காயம்பட்ட மரத்தை 
காணும்போதெல்லாம் 
கலங்கிப்போகிறேன்.
தளிர்  விடும் காலம்வரை 
தவமிருக்கிறேன்.....
அதனால்
என் சன்னலோரத்து
சின்னத்தொட்டியில்
நட்டுவைத்தேன் 
ஒரு சின்ன செடியை!

அந்த செடியில் கண்டேன்
நாலு கோடி இலைகள்
சுட்டெரிக்கும் சூரியனை
எட்டிப்பார்த்து சிரித்தன!

இது என் தமிழினம் சிந்திய
கண்ணீரிலும் செந்நீரிலும்
வளரும் செடி என்பதாலா?   

இன்னும் இளந்தளிர்கள்
இங்கே எட்டிப்பார்க்கின்றன
இந்த தளிர்களும் இலைகளும்
என்றும் வாடாதவைகள்
“என்றும் வெற்றி வரை  
என்றுதான் பாடுகிறதே!  

இந்தச்செடி ஒருநாள் மரமாகும்!
இழந்தநாடு அன்று எம் வசமாகும்!
********************************************
காணொளி-தமிழா தமிழா 



Thanks-YouTube-Uploaded by on Feb 10, 2009



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1