google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கடவுள் துகள்-ஒரு பிரபஞ்ச ஊழல்

Thursday, July 05, 2012

கடவுள் துகள்-ஒரு பிரபஞ்ச ஊழல்



இந்தியாவிலிருந்து
பணம்தான் பதுங்குகிறது
சுவிட்சர்லாந்தில்
என்று நினைத்தால்
செர்ன் ஆய்வுக்கூடத்தில்
பிரபஞ்ச கடவுளாக  
நம்மஊர் நடராஜர்
நாட்டியமாடுகிறார்

இது ஒரு பிரபஞ்ச ஊழல்
அறிவுக் கூட்டத்துக்கு  
அழிவின் ஆரம்ப கட்டம்

இங்கே உண்டு ஒரு கதை
காலில் அசிங்கம் பட்டால்
கழுவிவிட்டு போகாமல்
அதை தொட்டு மூக்கில் வைத்து
ஆய்வு செய்வானாம் அறிவாளி

பிரபஞ்ச ஆய்வு செய்வதாய்
பலகோடி செலவு செய்து
தேங்காய் உடைத்து
பூஜை செய்கிறார்கள்

விஞ்ஞானிகளெல்லாம்
மெஞ்ஞானிகளாகி
அழிஞ்ஞானம் செய்கிறார்கள்    

கடவுள் துகளை  
கண்டறிந்த விஞ்ஞானிகளே
எங்க ஊர் எம்.எல்.ஏ வை  
கண்டால் சொல்லுங்களே?
******************************************
காணொளி-ஒண்ணுமே புரியலே...



Thanks-YouTube-Uploaded by MegaSeLvA86 on Feb 24, 2011


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1