மழுங்கிவிடாமல் 
அவ்வப்போது அறிவை 
செம்மைப்பட தீட்டும் 
சானைக்கல்லே நூலகம் 
ஊருக்கு ஒரு கோயில் படைத்து 
உன் வாழ்க்கையை விதியென்று 
அவர் வாழ்க்கையை வளப்படுத்தி 
சமுதாயத்தை சீர்குழைத்தார் 
நூலகமில்லாத ஊர்களே 
நாட்டில் எதுவுமில்லையா?
ஊருக்கு ஒரு நூலகம் படைத்து 
அறிவு பொக்கிஷங்களை 
அதனுள் அடுக்கிவைத்து  
நம் வாழ்க்கையை சீர்படுத்த  
நாட்டில் எவரும் இல்லையோ?
நூற்றி எழுவது கோடிக்கு 
நூலகம் ஒன்றே ஓன்று 
ஓரிடத்தில் கட்டிவைத்து 
பெருமைதனை பேசியவர்கள் அன்று 
ஒப்பாரிதான் வைக்கிறார்களே இன்று 
நன்றாகத்தான் இருக்கிறது நூலகம் 
குமரியிலிருந்து குமரனோ குமரியோ 
அறிவைத்தேடி சென்னைக்கு 
அலையத்தான் முடியுமா?    
அறிவுக்கோயில் அது 
ஆனதே குப்பைமேடு என்று 
அறிவிக்கை விடுகிறார் ஒருவர் 
நீதிமன்றம் தடை விதித்தது என்று 
நெஞ்சை நிமிர்த்துகிறார் ஒருவர் 
அந்த ஆட்சியில் நட்ட மரத்தை 
இந்த ஆட்சி வெட்டி வீழ்த்துவதும் 
இந்த ஆட்சியில் நட்ட மரத்தை..... 
அடுத்து வரும் ஆட்சி 
நூலகமில்லாத ஊர் இனி வேண்டாம்
தெருவுக்கு தெரு நூலகமிருந்தால் 
தீருமே அறிவுப்பஞ்சம் இங்கே!   
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
| Follow @PARITHITAMIL | 
