google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மகுடி ஊதும் மாயபாம்புகள்

Sunday, July 15, 2012

மகுடி ஊதும் மாயபாம்புகள்




இங்கே
பாம்புகளுக்கும்
பாம்பாட்டிகளுக்கும்
பெரிய போட்டி

தேர்தலுக்கு முன்பு

படமெடுக்கும் பாம்புகள்  
பயந்ததுபோல்
பவ்வியமாய் நடிக்கும்
மகுடி உதும் மக்கள்
மகிழ்ந்துப்போவார்கள்

தேர்தலுக்கு பிறகு

இலவசங்களை
வாரிவழங்கி....
மகுடியைப் பிடுங்கி
பாம்புகள் ஊதும்  
மக்களெல்லாம்
மயங்கிக்கிடக்கிறார்கள்

இந்த பாம்புகளாவது
இருந்துவிட்டுப்போகட்டும்
அயிந்து ஆண்டுகள்தான்
அவர்கள் ஆட்டம்

இன்னுமொரு பாம்பு  
இது ராஜநாகம்
காவி உடையில்
காரிகைகளை மயக்கி
கடவுள் பெயரால்
கற்ப்பை சூறையாடும்
காமுகப்பாம்பு.....
(இப்போது ஒளிந்துகிடக்குது
கொடைக்கானலில்)

அடிபட்டால் அடங்கிப்போவதும்
ஆதரவு கிடைத்தால்
ஆட்டம் போடுவதும்
ஆளை விழுங்குவதும்
இதுபோல் இருக்குது
இங்கு பாம்புகள் நிறைய
மகுடி ஊதும் மாயபாம்புகள் 
*****************************
காணொளி-பாம்பு நடனம் 


Thanks-YouTube-Uploaded by on Jul 20, 2009

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1