விலையில்லாதவைகளை
வள்ளல்களாக
வாரிவழங்கி
மக்களை
மடயர்களாக்கும்
மாண்புமிகு
மந்திரவாதிகள்
வெளிநாடுகளில்
பணத்தையும்
உள்நாட்டில்
உணவையும்
பதுக்கிவாழ்ந்து
நடிக்கும்
பணக்கார
பரதேசிகள்
நேற்று
பன்றி காய்ச்சல்
இன்று
டெங்கு காய்ச்சல்
நாளுமொரு
காய்ச்சல்
நடுங்கும்
மக்களை மறந்து
உல்லாசமாக
ஓய்வெடுத்து
உறங்கும்
பொதுநலவாதிகள்
தாலிக்கு தங்கம்
யாசிக்கும்
தங்கத்தமிழ்நாட்டில்
தங்க
அரியாசனத்தில் அமர்ந்து
தங்க
கீரிடம் சூட்டி மகிழும்
தரித்திர
மடாதிபதிகள்
மக்கள்ஊழியர்களாக
மாதசம்பளம்
வாக்கும்
மேல்நிலை
கீழ்நிலை
எல்லா
நிலையிலும்
எதையாவது
கொடுத்தால்தான்
எதுவும்
செய்வேன் என்று
கையேந்தும்
ஊழல்வாதிகள்
நம்புங்கள்.....மக்களே
மன்னராட்சி
ஒழிந்துவிட்டது
மக்களாட்சி
நடக்கிறது
இவர்களும்
நம் மக்களே!
**********************************
காணொளி-எத்தனைக்காலம்தான்...
Thanks-YouTube-Uploaded by vijee1 on Dec 12, 2010
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |