google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அறை நிரப்பும் போராட்டம்

Tuesday, July 03, 2012

அறை நிரப்பும் போராட்டம்


இந்த வீட்டுக்காரம்மா
இறக்கமில்லாதவள்

நாமிருப்பதோ சமையலறையின் 
இண்டு இடுக்குகளில்....
இரவில்தான் நம் நடமாட்டம்
இந்த வீட்டுக்கார அம்மாவுக்கு
இதில் சங்கடம் என்ன இருக்கு?

நம்மில் பலரை சாகடித்தாள் 
மருந்து தெளித்து சண்டாளி!
கண்ணில் கண்டால் அடிக்கிறாள்
விளக்குமாற்றால் விரட்டி விரட்டி
காலாலும் மிதித்து நசுக்குகிறாள்

தோழர்களே! தோழியர்களே!
ஓன்று கூடுங்கள் எல்லோரும்
இனிவேண்டாம் நமக்கு
இந்த சமையல் அறை

அனைவரும் வாருங்கள்
அந்த அம்மாவின்
படுக்கை அறையில்
பதுங்குவோம் நாளை
கொடுப்போம் தொல்லை

இடைவேளை இல்லை
பயத்தில் யாரும்
பாதியில் போகக்கூடாது

இந்த வீடு அடுத்த வீடு
கரப்பான் பூச்சி அன்பர்களே!
அறப்போராட்டத்துக்கு 
அறைகூவல் விடுக்கிறேன்
அனைவரும் வாருங்கள்
அறை நிரப்பும் போராட்டம் 
***************************************************
காணொளி-என்னதான் நடக்கும்.... 


Thanks-YouTube
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1