google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நகரத்து மரங்கள்

Monday, July 09, 2012

நகரத்து மரங்கள்


உங்கள் வாகனப்புகையிலும்  
குழிவிழுந்த சாலைப்புழுதியிலும்
சிக்குவிழுந்து கிடக்கின்றதே  
எங்கள் சிங்கார தலைகள்
சீர்குலைந்து கிடக்கின்றதே  
எங்கள் சின்னஞ்சிறு இலைகள்

கிராமத்து கனிதரும் மரங்களல்ல
உங்கள் நகரத்தை அழகுசெய்ய
நீங்கள் நட்டிவைத்த மரங்கள்
நாங்கள் நகரத்து மரங்கள்

வாகனங்களின்
வக்கிர இறைச்சல்களில்
தொலைந்துபோகிறது
எங்கள் தென்றல் ராகம்
தள்ளாடுகிறது
எங்கள் தாலாட்டுப்பாடல்

நிழல் தரும் மரங்கள் நாங்கள்
நிற்கமாட்டீர்கள் யாரும் நீங்கள்
அவசரவேலை உங்களுக்கு
எந்த கத்திரிவெயிலுக்கும்
சுகம்தருவோம் நாங்கள்
ஆனாலும் நீங்கள்
அடைந்து கிடப்பீர்கள்
குளிர்சாதன அறைக்குள்   

நகரத்து சாக்கடை நீரைஉறிஞ்சி
நாறுகிறது எங்கள் தேகமும்
நகரத்து நச்சு காற்றால்
நாசமானது எங்கள் சுவாசமும்

அடுத்து மழை வரும் நாளுக்கு
ஆவலோடு காத்திருக்கிறோம்  
அழுக்கு தேகத்தை அலசிடவே  
அடமழைதான் பெய்யாதோ! 
********************************
காணொளி-திரு.நம்மாழ்வார்,இயற்கை விஞ்ஞானி   


Thanks-YouTube-Uploaded by mndheenathayalan on Jul 30, 2008

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1