google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: என் நாட்டில் வந்து ஏன் பிறந்தாய்?

Thursday, August 30, 2012

என் நாட்டில் வந்து ஏன் பிறந்தாய்?



நான் பிறந்த நாட்டை
நாசம் செய்யும் நீ
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?
மரங்களை வெட்டி
காடுகளை அழித்து
கட்டிடங்களில்
கதவும் சன்னலுமாய்
காட்ச்சிக்கு வைத்தாயே
மழை வரும் வழியை              
மறைத்து விட்டாயே
மக்கள் வாழ்வை
சிதைத்து விட்டாயே          
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?

மலையை உடைத்து
பாதாளம் தோண்டி
பளிங்கு கற்களை
பவ்வியமாய் எடுத்து
அடுக்கு மாளிகை
அழகுபட கட்டினாயே  
இயற்கை வளத்தை                
இல்லாமல் செய்யவா?
நாளை நிலநடுக்கத்துக்கு
வழி செய்து விட்டாயே!
மக்கள் வாழ்வை
வதைத்து விட்டாயே
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?

ஆற்று மணலை
அள்ளிச் சென்று  
ஆற்றுப் பாசனத்தை
அழித்து விட்டாயே
விவசாயின் வயிற்றில்
அடித்து விட்டாயே
மக்கள் வாழ்வை              
புதைத்து விட்டாயே
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?
       
நீ
அரசியல் வாதியானது
அள்ளிச் சுருட்டி
ஊழல் வாதியாய்
உரு மாறி அலையவா?
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?                 

நீ
மத வாதியானது
மனிதத்தைக் கொன்று
கடவுளுக்கு
களங்கம் செய்யவா?           
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?

நீ
நீதி தேவனானது
நியாயத்தை தின்று
அநியாயத்தோடு
கொஞ்சிக் குலாவவா?
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?


நீ
அரசு அதிகாரியானது       
அஞ்சுக்கும் பத்துக்கும்
கையயூட்டு வாங்க
கையேந்தி நிற்க்கவா?
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?

நீ
கனவு காண்பதும்
கவிதை எழுதுவதும்
காதல் செய்யவா?
இளம் நெஞ்சங்களில்         
விசத்தை விதைக்கவா?
என் நாட்டில் வந்து
ஏன் பிறந்தாய்?
*************************
காணொளி-நிற்பதுவே நடப்பதுவே..... 


Thanks-YouTube-Uploaded by RajsMed on May 28, 2011



indian songs by Pipeo
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1