google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மதில் மீது ஒரு பூனைக்குட்டி

Monday, August 20, 2012

மதில் மீது ஒரு பூனைக்குட்டி






Kitten by shinywhiny

மதில் மீது ஒரு பூனைக்குட்டி
இரண்டுபக்கமும் சாக்கடை
எந்தப்பக்கம் குதித்தாலும்
எமலோகம் போவது உறுதி
என்ன செய்வது தெரியாமல்
எல்லோரிடமும் உதவி கேட்டது

அங்கே வந்த 
அரசியல்வாதியோ  
அந்த பூனை எந்த கட்சி?
ஆளும் கட்சியா? 
எதிர் கட்சியா?
எந்த கட்சியும்
இல்லை அது
என்று தெரிந்ததும் 
அந்தோ! அவரோ
எதுவும் செய்யாமல்
எகிரிவிட்டார்

அடுத்து வந்த
ஆன்மீகவாதியோ       
என்ன பாவம் 
செய்தாயோ பூனையே!
என்னிடம் சொல்லு 
செய்த பாவத்தை
ஆண்டவனிடம் சொல்கிறேன்
அவர்தான் வந்து
உன்னை காப்பார் என்று 
அவரும் போனார் 
கடவுளைத்தேடி....

அதற்குள் கூடியது 
மாபெரும் கூட்டம்
பாதிக் கூட்டம்
பரிதாபம் கொண்டது  
பாவம் இந்த பூனை என்றே
அவர்கள் சாகும்வரை
உண்ணாவிரதம் இருந்தனர்
யார் சாகும் வரை? 
என்று தெரியாமல்
அந்த பூனையும் 
அலறியதே பரிதாபமாய்   

இன்னொரு கூட்டமோ
எரிந்தது கல்லை
இந்த பூனையோ 
ஏமாற்று பூனை
இருக்க கூடாது
இந்த உலகில் என்றே
சங்கடங்கள் பல செய்தது 
அந்த பூனைக்கு............

அந்த நேரம் 
அங்கே வந்தார்
அவரோ ஒரு மக்கள் கவிஞர்
அவரோ பாடினார்
அந்த பூனையிடம்
"பூனையே நீ
பூனையல்ல காட்டு புலி 
தன்னம்பிக்கையை 
தனக்குள் வைத்து
அவநம்பிக்கையில் 
அழலாமா?" என்று  

அந்த பூனைக்குள்
எழுந்ததே
ஆவேச ஊற்று
ஆகாயத்தில் பறந்ததே
கைகளை விரித்து
அதுவும் சிரித்ததே 
அவர்களைப்  பார்த்து ...

 ***************************
காணொளி-kitten dance...

Thanks-YouTube-Uploaded by ShallAdoreCats on Aug 1, 2009


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1