google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காலம் போகிறது

Saturday, August 04, 2012

காலம் போகிறது




Speed of time by Noise&Noise



மக்களுக்கு
இலவசம் வாங்க
கால்வலிக்க
காத்துக்கிடப்பதிலேயே
காலம் போகிறது

அரசியல் வாதிகளுக்கு
அடுத்த தேர்தலுக்கு
அறிவிக்கை விடுத்து
ஆயத்தமாவதிலேயே
காலம் போகிறது

கவிஞர்களுக்கு
பெண்மயிலுக்கு
தோகை கட்டி
கவிதை பாடவே  
காலம் போகிறது

நீதிமான்களுக்கு
நியாயத் தராசை
ஆட்சியாளர்களுக்கு
காவடி எடுப்பதிலேயே
காலம் போகிறது

மதவாதிகளுக்கு
மதத்தை காப்பதாய்
மனிதாபிமானத்தை
மிதித்து கொல்வதிலேயே
காலம் போகிறது

உழைப்பவனுக்கோ
உழைப்புக்கேற்ற
ஊதியம் கேட்டே
ஊளையிடுவதிலேயே
காலம் போகிறது

உழுபவனுக்கோ
விளையும் பயிர்
விலை போகுமா?
கவலையிலே
காலம் போகிறது

குடிகாரர்களுக்கோ
டாஸ்மாக்-கில் உள்ள
எந்த சரக்கில்
நீண்ட போதை?
கண்டுபிடிப்பதிலேயே
காலம் போகிறது 
***********************
காணொளி-காலத்தில் அழியாத  


Thanks-YouTube-Published on Mar 30, 2012 by rameshbabu1949

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1