google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: வாழும் நடிகர்கள்

Thursday, August 02, 2012

வாழும் நடிகர்கள்






chasing by tomecloudy
வாழும்போதே
இறப்பை பற்றி
இறக்கும் வரை...
இதை யாரும்
அறிவதுமில்லை

அதனாலே

புகைப்பதை பற்றி
வருந்துவதில்லை

போதை போடுவதில்
சலிப்பதில்லை

பாவ செயல்களுக்கு
பயப்படுவதில்லை

நோய்களை
வளர்த்துக்கொண்டு  
உண்பதில்
ஒழுக்கமில்லை

உழைப்பதற்கு
விரும்புவதில்லை
உழைக்காமலே
உல்லாசமாக வாழும்
ஆசைக்கு அளவில்லை

அவநம்பிக்கையை
அணைத்துக்கொண்டு
உறக்கத்திலிருந்து
விழிப்பதேயில்லை

கற்பனையில்
மிதந்துகொண்டு
கனவுகளை
கலைப்பதில்லை

பணத்தை
துதித்துக்கொண்டு  
பண்பை
மதிப்பதில்லை

இவர்கள்
வாழ்க்கையை
வாழ்பவர்கள் அல்ல
வாழ்வியல் நடிகர்கள்

இறப்பு நெருங்கும் முன்பே
இறந்து போனவர்கள்   
இல்லாமல் போனவர்கள்
இன்றும்
இருப்பதாக நினைத்து
இல்லாமல் இருப்பவர்கள்
இறந்து கொண்டே வாழ்பவர்கள்  
**********************************
காணொளி-நித்தம் நித்தம்..............



Thanks-YouTube-Uploaded by PSbalan1967 on Oct 8, 2010


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1