google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அச்சமில்லை அச்சமில்லை

Wednesday, September 12, 2012

அச்சமில்லை அச்சமில்லை





அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே
இச்சகத்
தில் உள்ளதையெல்லாம்,
ஊழல் செய்து விழுங்கிவிட
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே!.

துச்சமாக எண்ணி நம்மைத்
தூற்றி வழக்கு போட்ட போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே

லஞ்சம் வாங்கி உண்ணும் வாழ்க்கை
பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்ப தில்லையே

இச்சை கொண்ட பொருளெலாம்
சுரண்டும அரசியல் செய்தபோதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே.        


நச்சை வாயி லேகொணர்ந்து
லஞ்சமென்றே ஊட்டும் போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே.

காவற்படைகள் இங்கே
கைதுசெய்த போதிலும்,
நீதிபதிகள் உடனே

ஜாமின் தருவார் என்பதாலே
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே.

உச்சிமீது வானிடிந்து 
வீழுகின்ற போதினும்,
லட்சியம் கொண்டிங்கு 
லஞ்சம் வாங்க என்றும்  
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே.

(பாரதி! என்னை மன்னிப்பீராக!)
*******************************
காணொளி-லஞ்சம் ஊழல் வாங்குவா்களுக்கு


Thanks-YouTube-Published on Apr 28, 2012 by TMSounderarajan


Chinnachiru Kiliye by Tharshan
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1