google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: அடிமையாய் இரு!

Wednesday, September 26, 2012

அடிமையாய் இரு!



பிறக்க வைத்த
அன்னையின்
அன்புக்கு
அடிமையாய் இரு!

வாழ்வு கொடுத்த
தந்தைக்கு 
வாழும் நாளெல்லாம்
அடிமையாய் இரு!

அறியாமை
அகற்றி வைத்த
ஆசிரியருக்கு
அடிமையாய் இரு!



துடிக்கும் போது
துயர் துடைத்த
நட்புக்கு
அடிமையாய் இரு!

பெண்மையின்
உண்மையான
காதலுக்கு
அடிமையாய் இரு!

அமைதி தரும்
மரங்களுக்கு
உதவிடும்
அடிமையாய் இரு!

கவிதை பாடும்
காற்றுக்கு
களங்கம் செய்யாத
அடிமையாய் இரு!

தாகம் தீர்க்கும்
தண்ணீருக்கு
அசுத்தம் செய்யாத
அடிமையாய் இரு!

பசி தீர்க்கும்
நிலங்களுக்கு
பாதுகாக்கும்
அடிமையாய் இரு!
                         Thanks-YouTube-anifighter


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1