google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதல் எச்சரிக்கை!-1

Thursday, September 27, 2012

காதல் எச்சரிக்கை!-1



இது ஒரு நீளத் தொடர்

காதல் எச்சரிக்கை!

புதைகுழி இருக்குமிடத்தில்தான் 
எச்சரிக்கைப் பலகை இருக்கும்
அபாய இடங்களில்தான்
எச்சரிக்கைப் பலகை இருக்கும்
விபத்து நடக்குமிடத்தில்தான்
எச்சரிக்கைப் பலகை இருக்கும்

இது என்ன காதல் எச்சரிக்கை?

காதல் தெய்வீகமானது!
காதல் புனிதமானது!
காலம் காலமாக 
சொல்லப்படும் போது
இங்கு ஏன் வந்தது 
காதல் எச்சரிக்கை?

அன்று இருந்த காதல்
இன்று இங்கு இல்லை
உண்மையாக...

காதல் இன்று இங்கு
ஏதோ ஒன்றுக்கு
காரணியாக இருக்கிறது

ஆணுக்கு அது
ஆண்மையின்
பரிசோதனைக்கூடம்
காமத்தின் வடிகால்
கயமையின் இன்பத்துப் பால்

பெண்ணுக்கு அது
தொற்றிக் கொள்ளும்
கொழு கொம்பு
வாழ்க்கை பயத்தில்
தேடிக்கொள்ளும்
பாதுகாப்பு
பயணத்தின் வழித்துணை
இன்பப் பொழுது போக்கு
   
கண்டதையும் கேட்டதையும்
காதலைப் பற்றி எழுதுகிறேன்
நல்லக் காதலும் அடங்கும்
கள்ளக் காதலும் அடங்கும்

இது சொல்லும்
காதல் புரிந்துணர்வு
காதலிப்பவருக்கும்
காதலிக்கப் போவோருக்கும்
இது அபாய அறிவிப்பு! 

இது தொடரின் என்னுரை.
முன்னுரையும் கூட...    

காதல்-
கனவில் காண்பதற்கு
சுகமாய் இருக்கும்

கவிதையில் படிப்பதற்கு
தேனாய் சொட்டும்

கதைகளில் வாசிப்பதற்கு
களிப்பாய் இருக்கும்

திரையில் பார்ப்பதற்கு
திகட்டாமல் இனிக்கும்

திரைப் பாடல்களில்
பரவசம் ஊட்டும்

நிஜத்தில் மட்டும்
விஷமாய் இருக்கும்

இருபதில் இனிக்கும்
அறுபதில் கசக்கும்

யாருக்கு தெரியும்?
தீண்டியவருக்கே
நெருப்பு  
வெறுப்பாய் தெரியும்.  

பாம்பில் ஏது
நல்ல பாம்பு?
கெட்ட பாம்பு?

பாலியல் காதல்
வாழ்வை
பாழடித்து விடும்

காதல் எச்சரிக்கை!
காதலர்களே!
பாலியல்
காதல் ஜாக்கிரதை!

                          (தொடரும்)







                                           Thanks-YouTube-Uploaded by   vilva durai



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1