ஒலிம்பிக் பதக்கங்கள்
அத்தனையும் அள்ளி வந்த
வீரனைப்போல் விண்ணில்
வீறுகொண்டு பாய்ந்தது
ஈடு இணையற்ற
இந்தியாவின் அறிவு
வெற்றிக்கு உதவிய
விஞ்ஞானிகளையும்
ஆசியுடன் அனுப்பிவைத்த
ஏழுமலையானையும்
வாழ்த்தி வணங்குவோம்
(விஞ்ஞானமோ?
மெஞ்ஞானமோ?
மெஞ்ஞானமோ?
நாட்டுக்கு நல்லது செய்தால்
நெஞ்சார வாழ்த்திடுவோம்)
எத்தனையோ இடர்கள்
அத்தனையும் தவிடாக்கி
முன்னேறும் நாட்டுக்கு
முட்டுகட்டையாய் இருக்கும்
கயவர்களை களையெடுப்போம்
அந்நிய நாட்டு விந்துக்களின்
அற்ப புழுக்களையும்
இந்த நாட்டில்
இல்லாமல் செய்வோம்
இந்திய நாடு வளமாகட்டும்
Thanks-YouTube-Published on Sep 9, 2012 by etv2india
Vandematharam Flute BGM by a.r.rahman fans club
Vandematharam Flute BGM by a.r.rahman fans club
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |