செய்தி-
அணு உலையை மூடக்கோரி இடிந்தகரை மக்களுடன் கடற்கரை மணலில் புதைந்து ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ நூதன முறையில் போராட்டம் நடத்தினார்.
சிந்தனை -
போராட்ட வரலாற்றில் இவர் பெயரும் எழுதப்படும்.
******************************************************************************
செய்தி-
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அன்னிய முதலீடு ரத்தாகும்: நிதின்கட்காரி அறிவிப்பு
சிந்தனை-
அது என்ன அபச குணமாக வந்தால்?..அவர்களுக்கே நம்பிக்கை இல்லையோ?
*************************************************************
செய்தி-
மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சியினரை மதிப்பதே இல்லை. எந்த விஷயத்திலும் அவர்கள் எங்களை கலந்து ஆலோசிப்பது இல்லை.
சிந்தனை-
அம்மையாரே! நீங்கள்தான் அவ்வப்போது கூட்டணியை சட்டினியாக்கி
விடுகிறீர்களே!
*****************************************************************
செய்தி-
தேர்தல் கமிஷன் அதிரடி.தேர்தல் பிரசாரத்திற்கு விலங்குகளை பயன்படுத்தக்கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிந்தனை-
பிரச்சாரத்துக்கு நடிகர்கள் நடிகைகள்தானே இது வரை வந்தார்கள்..
*************************************
செய்தி-
தொலை தொடர்பு அலைகற்றை தவிர மற்ற இயற்கை வளங்களை ஏலம் விட வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
சிந்தனை-
விட்டா நாட்டையே ஏலம் விட்டு விடுவாங்கப்பா.
******************************************
செய்தி-
தாண்டவம் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி நாளை அந்தப் படம் வெளியாகிறது.
சிந்தனை-
இப்போதெல்லாம் படத்தை முதலில் கோர்ட்டில் வெளியிட்டு விட்டுதான் திரை அரங்குக்கு வருகிறார்கள்.நீதிபதியிடம் ஆசிர்வாதாமோ?நல்ல சகுனமோ? அல்லது விளம்பர உத்தியா?
Thanks-YouTube- UTVMotionPictures
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |