google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: நாட்டு நடப்பும் நையாண்டி மேளமும்

Saturday, September 22, 2012

நாட்டு நடப்பும் நையாண்டி மேளமும்



அரசியல் கட்சி தொடங்குவதற்கு தனது பெயர்,படம் பயன்படுத்த அன்னா ஹசரே தடை விதித்துள்ளார்

நல்லவன் எனக்கு நானே நல்லவன்
வல்லவன் இல்லைதான் ஆயினும் நல்லவன்
அரசியல் செய்ய விரும்பாதவன்
ஆதாயம் தேடுவோரை சேர்க்காதவன்
ஊழல்வாதிகளை வெறுப்பவன் ஆனாலும்
அவர்கள் கூடவே இருப்பவன் 
ஆயினும் நல்லவன்...நல்லவன் 

***********************************************



மிச்சமிருக்கும் ஈழத் தமிழர்களையாவது
காப்பாற்றுங்கள் என்று மத்திய அரசுக்கு
திமுக தலைவர் கருணாநிதி
உருக்கமான வேண்டுகோள்.

நான் ஆணையிட்டால் 
அது நடந்துவிட்டால்
இலங்கையில் ஒரு சிங்களரும் இருக்கமாட்டார்
என் உயிர் உள்ளவரை 
ஒரு தமிழரும் இனி
கண்ணீர் கடலிலே விழமாட்டார்
நான் ஆணையிட்டால்
இங்கு இன்னொரு டெசோ நடத்திவிட்டால்
இலங்கை தமிழர்கள் இன்னல் படமாட்டார்  

 **********************************************


மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற்ற விழாவில்
இலங்கை அதிபர் ராஜபக்ச கலந்துகொண்டு பேசுகையில்
அகிம்சை, சமாதானம், இரக்கக் குணத்தை
உலக மக்களிடத்தில் பரப்பவேன்டும் என்று கூறியுள்ளார்!

புத்திசொல்லும் மனிதரெல்லாம் 
புத்திசாலி இல்லை
தத்துவம் பேசும் மனிதரெல்லாம் 
தத்துவஞானி இல்லை
இறுமாப்பு கொண்டவன் வாழ்வு 
என்றும் நிலைக்கப் போவதில்லை   
இனத்தை அழித்து விழுங்கியவன்
என்றும் இருக்கப் போவதில்லை

***************************************



மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்குஅளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற மாட்டோம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங்
திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அந்த நாள் ஞாபகம் 
நெஞ்சிலே வந்ததே நண்பனே!  
இந்த நாள் அன்று போல் இல்லையே 
அது ஏன்? ஏன்? நண்பனே!
எந்த நாள் ஆனாலும் காலை வாருவேன்
எந்த காரியமும் ஆவதற்கு காலில் விழுவேன்
அது ஏன்? ஏன்? நண்பனே!

************************************




பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்ட அறிவிப்பு. டீசல் விலை உயர்வு வாபஸ் இல்லை. சிறு வியாபாரிகளை அந்நிய முதலீடு பாதிக்காது

உள்ளதை சொல்வேன்

நல்லதைச் செய்வேன்
வேறு ஒன்றும் தெறியாது
உள்ளத்தில் இருப்பதை
வார்த்தையில் மறைக்கும்
உத்தவனம் தெறியாது   

*************************************************


என்னப்பா நீ ..காட்டமான செய்தியா சொல்லிட்டு 
ஏதும் HOT-செய்தி சொல்லுப்பா 

அப்படினா நீ 
வெளிநாட்டுக்குத்தான் போகணும் 


முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுடனுக்கு
தான் உதவியாளராக இருந்தபோது
தங்களுக்குள் இருந்த உறவு குறித்து
ஒரு புத்தகம் எழுதி வெளியிட முடிவு செய்துள்ளார்
மோனிகா லெவின்ஸ்கி.

ஆரம்பமாவதும் பென்னுக்குள்ளே
கிளிண்டன் ஆடிய ஆட்டமெல்லாம்
அந்த மோனிகாவின் புத்தகத்திலே! 




  Urumi Melam Remix - Shack Jenny by Shack Jenny
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1