அழகான பெண் வேண்டும்
அந்தி மந்தாரை போல்
அவள் இருக்க வேண்டும்
பணத்தில் திளைக்க வேண்டும்
பண்பில் சிறக்க வேண்டும்
அறிவு பொங்க வேண்டும்
அப்படி ஒரு பெண்ணே
எனக்கு மனைவியாக
எங்கிருந்தாலும் தேடுவீர்
என்று சொன்னான் தரகரிடம்....
அகங்காரமும் ஆணவமும்
அவதாரமான அவன்
அந்தத் திருமணத் தரகரோ
அவனுக்குப் பாடம் புகட்ட
இருக்கு நீ கேட்ட
ஈடு இணையில்லாத பெண்
ஆனால் அதில் ஒரு குறை...
என்ன குறை? என்றவனிடம்
தரகர் சொன்னார்....
வருடத்தில் ஒரு நாள்
அவள் பைத்தியமாவாள்
ஆனவக்காரனோ....
அந்தத் தரகரை நச்சரித்தான்
அதனால் ஒன்றும் பரவாயில்லை
அவளையே தான் மனந்துகொள்கிறேன்
ஆரம்பியும் திருமண வேலையை என்று.
அவனிடம் சொன்னார் தரகர்
அதற்கு கொஞ்ச காலம் நீ
பொறுமையாய் இருக்க வேண்டும்..
அவளுக்கு எந்த நாள்
பைத்தியம் புடிக்கிறதோ
அந்த நாள் வரும் வரை.....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |