இரண்டு இளம் பட்டாம்பூச்சிகள்
அந்த மலர்வனத்தில்
காதல் செய்து மகிழ்ந்தன
ஆண் பட்டாம்பூச்சி
தங்கள் காதலின் ஆழத்தை
பரிசோதிக்க நினைத்து...
பெண் பட்டாம்பூச்சியிடம்
போட்டியாகச் சொன்னது-
நாளை மலரும்
இந்த மலர்வனத்தில்
முதல் மலர் மீது
நம்மில் யார்
முதலில் அமர்கிறமோ
அதுவே நம்மில்
அடுத்தவர் மீது இருக்கும்
அதீதமான உண்மை அன்பு!
அந்த ஆண் பட்டாம்பூச்சி
அதிகாலையில்
மலர்வனம் முழுக்க
அலைந்து திரிந்து
மலரும் நிலையிலிருந்த
ஒரு மொட்டு மீது அமர்ந்து..
தன் காதலிக்காகக் காத்திருந்தது.
அந்த மொட்டும் மலர்ந்தது
மலரிதழ்கள் விரிந்தன
விரிந்த மலரைப் பார்த்ததும்
ஆண் பட்டாம்பூச்சி
அலறித் துடித்தது
மலர்ந்த மலருக்குள்
மறைந்து இருந்தது
இறந்து...
அன்றிரவே வந்து
அமர்ந்திருந்த
பெண் பட்டாம்பூச்சி!
இது பட்டாம்புச்சிகளின்
காதல் கட்டுக்கதை
கதைகளில் சொல்லப்படுவது.
மனிதர்கள் காதலின்
மகத்துவம்தான்
தினமும் பார்க்கிறேமே
நாளிதழ்களிலும்
தொலைக்காட்சியிலும்...
Thanks-SoundCloud- Aval oru by Parithi Muthurasan
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |