google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: மின்சாரக் கடவுள்....?

Saturday, October 13, 2012

மின்சாரக் கடவுள்....?



கண்ணுக்குத் தெரியாத 
சக்தியே கடவுள்....?
மின்சாரம் கூட,
கண்ணுக்குத் தெரியாத 
கடவுள்தான். 

Glitter Graphics | http://www.graphicsgrotto.com/



கடவுளை விடப் பெரிய சக்தி
கடவுளைக்கூடக் கண்டுவிடலாம்
(நான் தான் கடவுள் என்று
நிறையப் பேர் கிளம்பியுள்ளார்கள்)
மிசாரத்தைக் காணுவது கடினம்

அந்தக் காலத்தில் மனிதர்கள்
மின்சார மீனின்(ஈல்) அதிர்ச்சியில் 
மின்சாரத்தை உணர்ந்ததார்கள். 

அம்பரை பூனை உரோமத்தால்
தேய்ப்பதால் ஒரு சக்தி வெளிப்பட்டு 
மின்சாரத்தை உணர்ந்ததார்கள்.
(அம்பர் என்பது பூமியிலிருந்து கிடைக்கும்
ஒரு வகைப் பிசின்)

கிரேக்க தத்துவஞானி தல்ஸ் மிலேடுஸ் 
கி.மு.600-ல் ஆய்வு செய்து
மின்சார காந்த சக்தியை அறிந்தார்

1936-ல் பாக்தாத்தில் கண்டுபிடிக்கப்பட்ட
பார்த்தியன் பேட்டரி என்ற மின்பொறி அடுக்கு
அந்தக் காலத்தில் நம் முன்னோர்களின்
மின்சார அறிவுக்கு எடுத்துக்காட்டு.

1600-ல் மின்சாரத் தந்தை வில்லியம் கில்பர்ட்
ஆய்வறிக்கையே நல்ல தெளிவு தந்தது

1971-ல் பெஞ்சமின் பிராங்க்ளின்
தன் சொத்துக்களை விற்று ஆய்வு செய்து
மின் பொறியின் ஆற்றல் கண்டார்.

1821-ல் மைக்கேல் ஃபாரடே தன் அறிவாற்றலால்
மின்சார இயக்கியை கண்டறிந்தார்

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மின் பொறியியலில்
பெரிய முன்னேற்றம் காண முடிந்தது.
நிகோலா டெஸ்லா, கலிலியோ ஃபெராரிகள், ஆலிவர் ஹெவிசைட், தாமஸ் எடிசன், ஓட்டோ ஜெட்லிக்கின், சர் சார்லஸ் பார்சன்ஸ், ஜோசப் ஸ்வான், ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், எர்னஸ்ட் வெர்னர் வோன் சீமென்ஸ், அலெக்சாண்டர் கிரகாம் பெல் மற்றும் லார்ட் கெல்வின் போன்ற விஞ்ஞான ஆய்வாயாளர்கள் மூலம்
மின்சாரம் நவீன வாழ்வின் அடிப்படையானது.

இவ்வாறு கண்டறியப்பட்ட மின்சாரம்
பல வகைகளில் காற்று,நீர்,அனல்  மூலம் உருவாக்கப்பட்தது. விஞ்ஞானத்தின் உச்ச கட்டமாக அணுஉலைகள் மூலம்
இன்று உருவாக்கப்படுகிறது.

கடவுளைப் போல் 
சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும்
இந்தக் கண்ணுக்கு தெரியாத 
மின்சாரக் கடவுள் அவரைப் போலவே 
விவாதத்துக்கும் போராட்டத்துக்கும் காரணமானது ஆச்சரியமில்லை!         
*************************************************************
இது விற்பனைக்கு அல்ல 



 *************************************
பெட்ரோல் விலை ஏறிபோச்சா....? 
கவலையே  வேண்டாம் 
இப்படி மாற்றிவிடுங்கள் 
உங்கள் வாகனத்தை.......

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1