---காதல் எச்சரிக்கை-8---
தூக்குத் தண்டனை தீர்ப்பு எழுதியதும்
எழுதுகோல் முனையை
முறித்துவிடும் நீதிமான் போல்...
விசப் புட்டியிலிருந்த
விஷம் முழுவதையும்
பிராந்தியும் தண்ணீரும்
கட்டி தழுவி சங்கமித்த
கண்ணாடி லோட்டாவில்
கவிழ்த்ததும்.....
விசப்புட்டியை வீசி உடைத்தான்.
விஷம் கலந்த
பிராந்தி லோட்டாவை
முடக்கென்று குடித்து
முடித்துக்கொண்டான்
அவன் வாழ்க்கையை.
ஆஜானுவான
அவன் உடல் துடி துடித்து....
நிசப்தத்தில் அடங்கியது.
அடுத்த நாள்தான்
தனிமையில் வாழ்ந்த
அவன் தற்கொலை
அடுத்தவர்களுக்குத் தெரியும்
அவன் எழுதி வைத்த ஓலையில்
அவன் காதல் கதை இருந்தது..
ஒரு கச்சடா கள்ளக்காதலே
அவன் சாவுக்குக் காரணமென்று...
இது
ஒரு தலை காதல் அல்ல
ஓர வஞ்சகக் காதல்
அவன் மனதில்
ஆயிரம் கற்பனைகள்
அழகாய் வளர்த்தவள்
இடையில் ஏனோ
இல்லை இதயம் என்றாள்.
அப்புறம்தான் தெரியும் அவனுக்கு
அவள் ஏன் அப்படிச் சொன்னாள்? என்று
அவன் நேசித்தவளின்
அக்காவை மணந்தவன்
தங்கையையும்
தள்ளிக்கொண்டு போய்விட்டான்.
அக்காள் கணவனின்
கள்ளப்பார்வையில்
காம சேட்டையிலும்
களங்கப்பட்டாள் அவள்.
காயப்பட்டாள். கர்ப்பமுற்றாள்.
வேறு வழியின்றி
அவள் அக்காளும்
தங்கைக்குத் தன் வாழ்வில்
பங்கு கொடுத்தாள்
புருசனின் காமப்பசிக்கு
தன் தங்கையையும்
பஞ்சனையாக்கினாள்.
அவளே அவன் நேசித்தவள்
அழகுப் பதுமை
தங்கத்தில் செதுக்கிய
தேகத்துக்குச் சொந்தக்காரி!
அவள் நினைவலைகளில்
அவன் தத்தளித்தான்
குடி பழக்கத்தில் மூழ்கினான்.
அவளைக் காணும்போதெல்லாம்
இப்பவும் வந்துவிடு என்னோடு
இதயத்தில் வைத்துப் பூஜிப்பதாக
ஏங்கி அழைத்தான் அவளை.
அந்த மோசக்காரியோ
சட்டை செய்யவில்லை
அவன் இதயம்
ஓட்டை சல்லடையானது.
கள்ளக் காதலுக்கும்
நல்ல காதலுக்கும்
நடந்த யுத்தத்தில்
நல்லக் காதல் நாசமானது
கள்ளக் காதல் களிப்பானது.
அன்று அவன் வாழ்வும்
அத்தோடு முடிந்தது
கூட்டி கழித்தால்…..
குப்பைத்தொட்டி
நாற்றமடிக்கும்
இது
ஒரு கச்சடா (கள்ளக்)காதல்.
காதல் எச்சரிக்கை!
பாலியல் காதல்
வாழ்வை
பாழடித்து விடும்
காதல் எச்சரிக்கை!
காதலர்களே!
பாலியல்
காதல் ஜாக்கிரதை!
(தொடரும்)
Thanks-YouTube-Uploaded by TamilDelta
Thanks-SoundCloud- by star messi
*********************************************************************
இது சிரிக்க......
**********************************************************************
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |