***காதல் எச்சரிக்கை!-7***
கபலையிலிருந்து
கொட்டுவதுபோல்
அவர் கண்களிலிருந்து
கண்ணீர் பாய்ந்தது
ஆண்மகன் ஒருவர் அழுவது
அதை பார்க்கும் நிலைமை
அதை விட கொடுமை ஏதுமில்லை
என்ன ஆச்சு இந்த நண்பருக்கு?
காணும் போதெல்லாம்
அவர் ஒரு கதை சொல்வார்
அவர் கள்ளக் காதல் கதையை
அவுத்து விடுவார் அளவில்லாமல்...
அவைகள் உண்மையா?
அளந்து விடும் கற்பனையா?
அவர் சொல்லும் கதைகளில்
அனைத்து வயது பருவ பெண்டிரும்
அவ்வப்போது வந்து போவார்கள்
அதில் சில பேர்
அவரிடம் சல்லாபித்ததாக
இவரிடம் படியாதவர்கள்
அடுத்தவர் வலையில்
அகப்பட்டு கிடப்பதாக...
அப்படி யொன்றும்
மன்மதன் இல்லை அவர்
அவர் பேசுவதை
கேட்டும் கேட்காததுமாய்...
இன்று என்ன வந்தது அவருக்கு?
கடிதம் ஒன்றை நீட்டினார்
அவர் மனைவி எழுதிவைத்து விட்டு
யாருடனோ ஓடிவிட்டதாக...
என்னால் நம்ப முடியவில்லை
எனக்கு தெரியும் அவர் மனைவியை
இரண்டு பிள்ளைகளுக்கு தாயான அவர்
அப்படிப்பட்ட ஓடுகாலி பெண் அல்ல
கடிதத்தை படித்ததும்
கலங்கித்தான் போனேன்
தூரத்து ஊரில் இருக்கும்
அவள் அம்மாவிடம்
தொலைபேசியில்
தொடர்பு கொண்டேன்
உண்மையை தெரிந்து கொள்ள...
அவளுடைய அம்மாவோ
எதுவும் சொல்ல தயங்கினார்கள்
என் குரல் கேட்டதும்
அண்ணனா என்று
அந்த நண்பரின் மனைவி
அழு குரலில் பேசி.........
அப்படி எதுவும் இல்லை
அவள் கணவர் இப்போதெல்லாம்
அவள் மீது சந்தேகம் கொண்டு
அடிக்கடி அடிப்பதாகவும்
பேப்பர்காரரிலிருந்து
பக்கத்து வீட்டுக்காரர் வரை
அவள் சல்லாபிப்பதாக
சந்தேகப்படுவதாலும்
இப்படி ஒரு நாடகத்தை...
கடிதம் எழுதிவைத்து விட்டு
இரண்டு குழந்தைகளுடன்
அம்மா வீட்டுக்கு சென்று
அடைக்கலம் ஆன கதையை....
அந்த நண்பரை பார்த்தேன்
அவரும் காதலித்துதான்
அந்த பெண்ணை மணந்து கொண்டவர்
நான் எதுவும் சொல்ல வில்லை
என் பார்வையை பார்த்து
அவரே புரிந்து கொண்டார்
அடுத்த பெண்கள் மீது
அவதூறு கதைகள் கட்டியவர்
தன் மனைவி மீது கட்டிய
தவறான சந்தேக கதைக்கு
தலை குனிந்து அழுதார்.
மனைவியையும்
குழந்தைகளையும்
அழைத்து வர புறப்பட்டார்
அப்பாடா...
அந்த கள்ளக் காதல் அலப்பறை
அத்தோடு ஆட்டம் முடிந்தது
காதல் எச்சரிக்கை!
பாலியல் காதல்
வாழ்வை
பாழடித்து விடும்
காதல் எச்சரிக்கை!
காதலர்களே!
பாலியல்
காதல் ஜாக்கிரதை!
(தொடரும்)
*****************************************
இதுதான்
உண்மையான காதலோ?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |