----தந்தை பெரியார்
ஒருவரே!-2-----
அன்று ஆண்ட மன்னர்கள்
ஆண்டவன் என்று சொல்லி
ஆலையங்கள் பல கட்டி
ஆன்மீகவாதிகளை
அதனுள் குடியேற்றி
ஆயிரம் கட்டுக்
கதைகள் தீட்டி
மக்களை
மடையர்களாக்கி
அடங்கிக்கிடக்கும்
அடிமைகளாக்கி
அவர்தம் சுயநல
ஆட்சியை
காலம் காலமாக
காத்திடவே
கடவுளைப படைத்தார்கள்.
மதம்-
“பொது மக்களுக்கு
உண்மையாக தெரியும்
அறிவாளிகளுக்கு
போலியாக
புரியும்
ஆட்சியாளர்களுக்கு
உபயோகமாக இருக்கும்”
என்று எழுதினார்
“ரோமானிய பேரரசின்
சரிவு
மற்றும்
வீழ்ச்சி
வரலாறு”
எழுதிய எட்வர்ட் கிப்பன்
பகுத்தறிவை பறைசாற்றிய
மேல்நாட்டு எட்வர்ட் கிப்பன்
கருத்து விவாதத்தில்
கலந்து கொள்வதை என்றும்
கடுகளவும்
விரும்பாதவர்.
ஆனால்....
ஈரோடு தந்த
தந்தை பெரியார்
ஒரு பகுத்தறிவு
விவசாயி!
அறியாமையில்
அல்லல்பட்ட
அடிமட்ட மக்களுக்கு
பகுத்தறிவு விதைகளை
அள்ளி விதைத்தார்
அம்மக்கள்
இதயங்களில்...
விதைத்ததுடன்
நிற்கவில்லை
முளைத்த பயிர்களை
பேணி வளர்த்தார்
விஷப்பூசிகளை
விரட்டி அடித்தார்
விஷப்பூசிகளை
விரட்டி அடித்தார்
அழிக்க நினைத்தோரை
களையெடுத்தார்.
உலகில் பகுத்தறிவாளர்கள்
நிறையபேர் இருந்தனர்
சிறந்த பகுத்தறிவாளர்
சிறந்த சிந்தனையாளர்
என்று சொல்ல இருந்தவர்
களம் கண்டு வாகை சூடியவர்
தந்தை பெரியார் ஒருவரே!
(தொடரும்)
************************************
Thanks-SoundCloud ஈ. வெ.ரா.பெரியார் by balashera
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |