----காதல் எச்சரிக்கை-6----
அலறியபடி ஓடி வந்தாள் அவள்
தன் மகள் இறந்துபோன செய்தி கேட்டு
வாசல் முன் கூடியிருந்த்தோரை
விலக்கி விட்டு நுழைந்தவள்
தூக்கில் தொங்கும் மகளைப் பார்த்து
துடிதுடித்துபோனாள்
ஒன்றும் தெரியாதவன் போல்
ஓரமாக இருந்த தன் புருசனை
பிடரி பிடித்து அடித்தாள்
அவன் தான் கொலைகாரன்
தன் மகளைக் கொன்றவன் என்று.
அவள் முதல் கணவன்
ஒரு முழுக் குடிகாரன்
அடித்து துன்புறுத்தி அவளை
சந்தேகத்தில் நோகடித்தான்
அந்த சந்தர்ப்பத்தில்
அடுத்த வீட்டுக்காரன்
அவள் மனதில் நுழைந்து விட்டான்
அய்ந்து வயது பெண் குழந்தையுடன்
முதல் கணவன் உறவை முடித்து
இவன் வீட்டில் குடியேறினால்
தாலிகட்டாத மனைவியாக.....
முதல் கணவனும் அவமானத்தில்
எங்கே போனான்?
எவருக்கும் தெரியாது
மொட்டாக இருந்த
அவள் மகள் மலர்ந்தபோது...
அவள் காமுககணவன் பார்வை
அவள் மகள் மீது விழுந்தது
அவள் மகளை பருகிவிட துடித்தது
தன் காமுக காதல் கணவனின்
நயவஞ்சக பேச்சும் பார்வையும்
அவள் அறிந்தபோது
தடுக்க முடியாமல் தவித்தாள்
சந்தர்பம் கிடைத்தபோது
அந்த சர்ப்பம் தீண்டிவிட்டது
ஆசை தீர அனுபவித்துவிட்டு
அது வெளியே தெரிந்தால்
விபரீதம் என்று நினைத்து
அவள் மகளை கொன்று
தூக்கில் தொங்க விட்டது
அந்த கிராமத்து பெண்களில் சிலர்
உயிரற்ற அந்த இளம் கன்னியின்
அந்தரங்க உறுப்பை பார்த்து
அறிந்து கொண்டனர்
அது தற்கொலை அல்ல
அவள் கற்பழித்து
உயிரிழந்த கொடுமையை...
அந்த காமுகன் முகத்தில்
அந்த ஊரே காரித்துப்பியது
சட்டத்துக்கு இல்லை
சரியான சாட்சி.
நடமாடுகிறான் அவன்
நல்லவனாக நாட்டில்.
அவளைத்தான் காணவில்லை
கள்ளக்காதல்
அவள் வாழ்வையும் சீரழித்தது.
அவள் மகள் வாழ்வையும் முடித்தது.
காதல் எச்சரிக்கை!
பாலியல் காதல்
வாழ்வை
பாழடித்து விடும்
காதல் எச்சரிக்கை!
காதலர்களே!
பாலியல்
காதல் ஜாக்கிரதை!
(தொடரும்)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |